
பாங்காக், செப்டம்பர் 9 – தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா மருத்துவமனையில் இருந்தபடி அனுபவித்த சிறைத்தண்டனை செல்லாது என்று தீர்மானித்த உச்ச நீதிமன்றம், இன்று ஓராண்டு சிறைத்தண்டனை அவருக்கு விதித்துள்ளது.
தக்சின், கடந்த 2023 ஆம் ஆண்டு நாடு திரும்பியபின், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மன்னிப்பின் அடிப்படையில் அவரின் தண்டனை காலம் ஓராண்டாக குறைக்கப்பட்ட பின்னர் அவர் சிறையில் தண்டனையை அனுபவிக்காமல் தனியார் மருத்துவமனையில் ஓராண்டு சிறை வாசத்தை அனுபவித்து விட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தங்கியிருப்பது சிறைத்தண்டனையாகக் கருதப்பட முடியாது, என தீர்ப்பளித்த நீதிபதி இப்புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2001 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தக்சின், இராணுவக் கலவரத்தில் பதவியிழந்தபின் நீண்டகாலம் நாடு கடத்தலில் வாழ்ந்தார்.
2023 ஆம் ஆண்டு தாய்லாந்து திரும்பிய அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி, அங்கே சிறைவாசம் இருக்க செய்ததில் நிச்சயம் அரசியல் பின்னணி இருக்க வேண்டுமென்று நீதித்துறை சந்தேகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.