
குவாலா திரங்கானு, பிப்ரவரி-1 – குவாலா திரங்கானு, பந்தாய் பத்து பூரோக் டுவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 34 எலும்புத் துண்டுகள், மனித எலும்புக் கூடுகள் அல்ல என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவு நடத்திய பரிசோதனையில் அது கண்டறியப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஸ்லி மோஹமட் நூர் தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகளின் வடிவம், தடிமன், நீளம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன; அதோடு, எந்த மனித எலும்புக்கூட்டுடனும் அவை ஒத்திருக்கவில்லை என்பதன் அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் அம்முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த எலும்புத் துண்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரி, DNA profile சோதனைக்காக வேதியியல் துறைக்கு அனுப்பப்படுகிறது.
முன்னதாக, JKR குடியிருப்புக்குப் பின்னால் கைவிடப்பட்ட புதர்ப் பகுதியில் அந்த எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த இடத்தருகே பழைய சுடுகாடு எதுவும் இருக்கின்றதா அல்லது அது தனியாருக்குச் சொந்தமான நிலமான என்பதும் விசாரிக்கப்படும் போலீஸும் கூறியிருந்தது.