புது டெல்லி, நவம்பர்-29, மக்கள் மத்தியில் சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு போட்டி வைத்தால், அசைவ உணவுகளின் கையே ஓங்குமென்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது… அதுவும் திருமண விருந்து வாயிலாக!
வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு திருமண விருந்தின் வீடியோ தான் அப்படி வைரலாகியுள்ளது.
விருந்து தொடங்கியதும், விருந்தினர்கள் அசைவ உணவுகள் இருக்குமிடத்தையே தேடி முற்றுகையிட்டனர்.
Chicken Tikka, Kebab போன்ற அசைவ உணவுகளை முண்டியடித்துகொண்டு தட்டுகளில் அடுக்க அவர்கள் ஆர்வம் காட்டினர்.
அசைவ உணவுகள் இருந்த எல்லா பக்கமும் நீண்ட வரிசை…
ஆனால், சைவ உணவுகள் பரிமாறப்பட்ட கூடாரங்களில் விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே விருந்தினர்கள் இருந்தனர்.
பக்கோடா, உருளைக் கிழங்கு மசியல் வடை போன்ற சைவ உணவுகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அவற்றைப் பரிமாற காத்திருந்த பணியாளர்களும் சோகமே உருவான முகத்துடன் நின்றிருந்தனர்.
அந்த வீடியோ, பார்ப்போருக்கு சிரிப்பை வரவழைத்தாலும், உணவுத் தேர்வு என்பது தனிமனித சுதந்திரம் என்பதை கருத்தில் கொண்டு, தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்காக கருத்துப் பதிவிடும் பகுதி (comment section) மூடப்பட்டிருந்தது.