
கோலாலம்பூர், பிப்ரவரி 6 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், வலது இடுப்பு எலும்பு முறிவு காரணமாக தேசிய இதய நிறுவனம் (IJN) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவருக்கு வீட்டில் இரவு தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பகல் நேரங்களில் IJN- யில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சிகிச்சை மற்றும் உடற்பயிற்சிக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்து வருகிறார் என்றும் கூறினர்.
எச்சரிக்கையாக, அவர் இன்னும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் சந்திக்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



