பாசீர் பூத்தே, நவ 18 – தும்பாட் மற்றும் கோத்தா பாருவில் இரண்டு இடங்களில் 790,000 சிகரெட்டுக்களை கடத்த முயன்றதை மலேசிய கடல் அமலாக்க நிறுவனத்தின் அமலாக்க அதிகாரிகள் முறியடித்தனர். வெள்ளிக்கிழமையும் நேற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மூன்று இயந்திர ஆற்றலைக் கொண்ட ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டதோடு 600,000 ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேவு தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து முதல் சோதனை நடவடிக்கை வெள்ளிக்கிழமை காலை மணி 4.30 அளவில் தும்பாட் கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய கடல் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் கேப்டன் இர்வான் ஷா ( Erwan Shah Soahdi ) தெரிவித்தார்.
பதிவு எண் பட்டையைக் கொண்டிருக்காத அந்த படகு தும்பாட் ஆற்று முகத்துவாரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் விரைவாக சென்றது. அதனைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடம் துரத்திச் சென்ற பின் காட்டுப் பகுதியில் நுழைந்த அந்த படகு சதுப்பு நில மரத்தில் மோதியபின் அதில் இருந்தவர்கள் தலைமறைவாகினர். அந்த படகில் இருந்து 180,000 ரிங்கிட் மதிப்புள்ள 510,000 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்தோடு அந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டதாக எர்வான் கூறினார். அதன் பிறகு மூன்று இயந்திரங்களைக் கொண்ட மற்றொரு படகு பறிமுதல் செய்யப்பட்டதில் 500,000 ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக எர்வான் கூறினார். அப்படகில் இருவர் இருந்ததாக நம்பப்படுகிறது, இதனிடையே Pulau Gagak தீவில் கைவிடப்பட்ட மற்றொரு படகிலிருந்து அதிகாரிகள் அதில் இருந்த 100,000 ரிங்கிட் மதிப்புள்ள 280,000 சிகரெட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சிகரெட்டுக்கள் அனைத்தும் அண்டை நாட்டிலிருந்து உள்நாட்டு சந்தைக்காக கடத்தி வரப்பட்டதாக நம்பப்படுகிறது.