புத்ராஜெயா, அக்டோபர்-24 – துருக்கியில் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புச் செயலகம் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
அதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அத்தாக்குதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டு, 22 பேர் காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லையென்றாலும், நிலவரங்களை அங்காராவில் உள்ள மலேசியத் தூதரகம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
நடப்பு நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, துருக்கியில் உள்ள மலேசியர்கள் முழு விழிப்பு நிலையிலும் எச்சரிக்கையாகவும் இருக்கும் அதே சமயம், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றியும் நடக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதன் கிழமை மாலை அத்தாக்குதலை நடத்திய ஓர் ஆணும் பெண்ணும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிபிடத்தக்கது.