
வெலன்சியா, பிப்ரவரி-23 – நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் பந்தய விபத்தில் சிக்கியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வெலென்சியா நகரில் நடைபெற்ற பந்தயத்தின் போது இப்புதிய விபத்து ஏற்பட்டது.
மற்றொரு காரை முந்திச் செல்ல அஜித்தின் கார் முயன்ற போது, அது அக்காரை மோதியது.
இதனால் அஜித்தின் கார் 3 முறை உருண்டு விழுந்தது.
அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
அஜித்தின் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்பந்தயத்தில் அஜித் 14-ஆவது இடத்தைப் பிடித்தார்.
அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போதும் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
எனினும் அப்பந்தயத்தில் அவரது அணி 3-வது இடத்தைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.