
சியோல், மார்ச்-26 – தென் கொரியாவின் தென்கிழக்கு மாநிலங்களில் பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
காடுகள் சூழ்ந்த ஒரு மாவட்டத்தில் 12 பேரும், மற்றொரு மாவட்டத்தில் 4 நான்கு பேரும் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறியது.
தீயில் இருந்து தப்பிக்க முயன்றபோது சிலர் உயிரிழந்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலைப் பரவத் தொடங்கிய மோசமான காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான கைதிகளை சிறைகளிலிருந்து மாற்றினர்.
பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீயை அணைக்க, தீயணைப்பு ஹெலிகாப்டர்களோடு தரைப்படை வீரர்களும் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்று புதன்கிழமை வறண்ட நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏராளமான வீடுகளுடன் பழங்கால கோயில்களும் தீயில் அழிந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை தென் கொரிய அரசாங்கம் அவசரகால இடங்களாக அறிவித்துள்ளது.