Latestமலேசியா

தெமர்லோவில் சாலை மேட்டில் ஏற முடியாமல் லோரி திடீரென பின்னால் நகர்ந்ததில் ஓட்டுனர் பரபரப்பு

தெமர்லோ, டிச 11 – தெமர்லோ ஜாலான் புக்கிட் டாமார் – Lakum சாலை மேட்டில் ஏற முடியாமல் சரக்கு ஏற்றியிருந்த லோரி திணறியதோடு திடீரென பின்னல் நகர்ந்ததால் அதன் ஓட்டுனர் பெரும் பரபரப்புக்கு உள்ளானார். எனினும் இதர வாகனங்களில் மோதாமல் மிகவும் சமார்த்தியமாக அந்த லோரியை அதன் ஓட்டுனர் கையாண்டது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

நேற்று காலை மணி 11.45 அளவில் நிகழ்ந்த அந்த சம்பவம் தொடர்பான 57 வினாடிகளைக் கொண்ட காணொளி வாகனத்தின் முன்புற Dashcam மில் பதிவாகி வைரலானது . அந்த லோரி சாலையோரத்திலுள்ள கால்வாயில் விழுந்ததில் அதன் ஓட்டுனர் காலில் சொற்ப காயத்திற்கு உள்ளானதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் மஸ்லான் ஹசான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!