
கோலாலம்பூர், மார்ச்-31- இன்று உகாதி தெலுங்கு வருட பிறப்பைக் கொண்டாடும் அச்சமுதாய மக்களுக்கு, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்து வாழும் இம்லேசியத் திருநாட்டில், இந்தியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு விழாக்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.
அந்த தொடர் கொண்டாட்டங்களை இன்றைய உகாதி புத்தாண்டு தொடக்கி வைக்கிறது.
உலகெங்கும் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்களுக்கு இன்றை நாள் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இந்த இனிமையான தருணத்தில் ம.இ.கா-வும் பங்கெடுத்துக் கொள்கிறது.
எனவே இந்நன்னாளில் மலேசியத் தெலுங்கு மக்கள் வளமான வாழ்வையும் நலமான எதிர்காலத்தையும் பெற்றிட ம.இ.கா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் ‘உகாதி சுபகாஞ்சலு’ என நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ விக்கி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.