Latestமலேசியா

தேசியக் கொடியில் நிகழ்ந்த தவறுக்கு திரெங்கானு அம்னோ இளைஞர் மன்னிப்பு; பினாங்கில் இராட்சத கொடி ஏற்றப்பட்டது

குவாலா திரங்கானு, ஆகஸ்ட்-13 – ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியை உட்படுத்திய 2 சம்பவங்களில் நேற்று ஒரே நாளில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன.

முழுமைப் பெறாத தேசியக் கொடியை சமூக ஊடகத்தில் பதிவேற்றியதற்காக திரங்கானு அம்னோ இளைஞர் பிரிவு பகிரங்க மன்னிப்புக் கோரியது.

அதே சமயம், பினாங்கில் ஜாலூர் கெமிலாங்கைத் தலைக்கீழாக பறக்க விட்டு சர்ச்சையில் சிக்கிய கடை உரிமையாளர், DAP-யின் ‘கரிசனத்தில்’ கடையில் இராட்சதக் கொடியை மாட்டியுள்ளார்.

திரங்கானு சம்பவத்தில், 14 கோடுகளுக்கு பதிலாக 12 கோடுகளே இருக்கும் தேசியக் கொடியின் படம் இடம் பெற்றிருந்தது.

அது வரைகலை வடிவமைப்பாளர் (graphics designer) அறியாமல் செய்த தவறு என, மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Tengku Haphiz Putera கூறினார்.

இலவசமாக வடிவமைத்துக் கொடுத்திருந்தாலும் அவரை தற்காக்க மாட்டேன் எனக் கூறிய Haphiz, விசாரணையை போலீஸிடமே விட்டு விடுவதாக சொன்னார்.

அத்தவற்றை நாங்கள் அனுசரித்து போக மாட்டோம் என்றார் அவர்.

முந்தையச் சம்பவங்கள் தொடர்பில் தேசியக் கொடியை பற்றி அம்னோ இளைஞர் பிரிவும் அதன் தலைவர் Dr அக்மால் சாலேவும் ஊருக்கே உபதேசம் செய்தது நினைவிருக்கலாம்.

இவ்வேளையில், பினாங்கு Jalan Bertam Perdana-வில் சர்ச்சையில் சிக்கிய வீட்டு உபகரண கடையில் DAP இராட்சத தேசியக் கொடியை மாட்டியுள்ளது.

10×20 அடி என்ற அளவில் அந்த ஜாலூர் கெமிலாங் மாட்டப்பட்டதானது, சரியாக கொடியேற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், நடந்த தவறு மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாக, பினாங்கு DAP கூறிக் கொண்டது.

தேசியக் கொடிகளை உட்படுத்தியத் தவறுகள் சில மாதங்களாக சற்று ஓய்ந்திருந்த நிலையில், தேசிய தின கொண்டாட்ட மாதமான இப்போது அத்தகையச் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!