
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-22 – 2026 தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒரு சிறப்பு போக்குவரத்துச் சேவையை அறிவித்துள்ளது.
அதாவது, தண்ணீர் மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்துடன் இணைந்து, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்களுக்காக, மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கில் கூடுவர் என என்பதால், சரிவான படிக்கட்டுகளை பயன்படுத்தும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசலில் எளிதில் பரவும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களின் ஆபத்தையும் இது குறைக்க உதவும் என அறப்பணி வாரியம் அறிக்கை வாயிலாகக் கூறியது.
இச்சிறப்பு சேவை, வரும் ஜனவரி 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
பிற்பகல் 3.30 மணிக்கு பதிவுத் தொடங்கி, மாலை 4.30 மணிக்கு மலைக்கு போக்குவரத்துத் தொடங்கும்.
அபிஷேகம், பூஜை அனைத்தும் முடிந்து 7 மணிக்கு மேல் மலையடிவார பிள்ளையார் கோயிலில் உணவும் வழங்கப்படும்.
பக்தர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதுமே தங்களின் முன்னுரிமை என அறவாரியம் குறிப்பிட்டது.



