கோலா திரெங்கானு, டிச 27 – தொடர்ந்து கல்வத் குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஆடவர் ஒருவகுக்கு விதிக்கப்பட்ட ஆறு பிரம்படி தண்டனை 2 நிமிடத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளியான 42 வயதுடைய Mohd Affendi Awang சிறைச்சாலை உடையுடன் மாராங் சிறைச்சாலை அதிகாரியுடன் Masjid Al – Muktafi Bilah Shah பள்ளிவாசலுக்கு பிற்பகல் மணி 2.28 வந்துச் சேர்ந்தார். கைவிலங்கிடப்பட்டு அங்கு கொண்டுவரப்பட்ட முகமட் எப்பெண்டி சிறப்பு அறைக்கு கொண்டுச் செல்லப்பட்டடு சுமார் 20 நிமிடங்களுக்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பிரம்படி தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் குற்றவாளி பிரம்படி தண்டனை நிறைவேற்றும் மண்டபத்திலுள்ள ஒரு மூலையில் சிறை அதிகாரி, திரெங்கானு சமய விவாரத்துறை அதிகாரி மற்றும் மாநில சுகாதார அதிகாரிகளை சந்தித்தார். சிறை அதிகாரி வழங்கவிருக்கும் பிரம்படி தண்டனை குறித்து முகமட் எப்பெண்டிக்கு விளக்கம் அளிக்கப்பட்டவுடன் அவர் அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தார்.
நண்பகல் மணி 2.50 அளவில் ஆறு பிரம்படி வழங்கும் தண்டனை தொடங்கி நண்பகல் மணி 2.52க்குள் முடிந்தது. தண்டனை வழங்கப்பட்டு முடிந்தவுடன் முகம் மூடப்பட்ட நிலையில் முகமட் எப்பெண்டி அங்குள்ள மண்டபத்தின் சிறப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடலநல பரிசோதனைக்கு பின் மாலை மணி 3.01 அளவில்
A’asim மண்டபத்திலருந்து வெளியேறி சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். முகமட் எப்பெண்டிக்கு பிரம்படி நிறைவேற்றும் தண்டனையை திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் காலில் அப்துல் ஹாடி, இஸ்லாமிய சமய மன்ற மற்றும் திரெங்கானு மலாய் பாரம்பரிய சடங்கு மன்றத்தின் தலைவர் டத்தோ Shaikh Harun Ismail மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 70 பார்வையாளர்கள் பார்வையிட்டனர். எனினும் இந்த தண்டனையை நிறைவேற்றும் நிகழ்வில் முகமட் எப்பெண்டியின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் காணப்பட்டவில்லை. முகமட் எப்பெண்டிக்கான பிரம்படி தண்டனையில் மூன்று அவரது முதுகிலும் இதர மூன்று பிரம்படி அவரது பிட்டத்திலும் நிறைவேற்றப்பட்டது.