
பாசீர் கூடாங், செப்டம்பர்-18,
ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் புக்கிட் டாஹ்லியாவில் உள்ள ஒரு வங்கியின் முன் ஒரு ATM இயந்திரம், ஒரு பண வைப்பு இயந்திரம் மற்றும் கார்களை மண்வெட்டியால் சேதப்படுத்திய ஒருவரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
56 வயது நபர் அளித்த புகாரையும், சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவையும் தொடர்ந்து சந்தேக நபர் கைதானார்.
ஸ்ரீ ஆலாம் இடைக்கால போலீஸ் தலைவர் விக்ரமாதித்தன் அதனை உறுதிப்படுத்தினார்.
செவ்வாய்க்கிழமைக் காலை 7.45 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தைத் தொடர்ந்து 54 வயது சந்தேக நபரை போலீசார் கைதுச் செய்து, பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி மற்றும் 0.9 கிராம் methamphetamine போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர் சம்பவத்தின் போது போதைப்பொருள் உட்கொண்டதும் பரிசோதனையில் உறுதியானது.
அதோடு, குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான 6 பழையக் குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
மேல் விசாரணைக்காக செப்டம்பர் 19 வரை அந்நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.