Latestமலேசியா

நஜீப்பின் மாற்றான் மகன் மற்றும் 2 நிறுவனங்களுக்கு எதிராக தொடுத்த 248 மில்லியன் டாலர் வழக்கை 1MDB மீட்டுக் கொண்டது

கோலாலம்பூர், பிப்ரவரி-25 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் மாற்றான் மகன் ரீசா அசிஸ் மற்றும் அவருடன் தொடர்புடைய 2 நிறுவனங்களிடமிருந்து 248 மில்லியன் டாலர் பணத்தை மீட்க 1MDB நிறுவனம் தொடுத்த வழக்கு, யாரும் எதிர்பாரா திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

அதாவது, அம்மூன்று தரப்புகளுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக 1MDB கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

அம்முடிவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

வழக்கை கைவிட வாதி தரப்பு எடுத்த முடிவை ரீசா அசிஸ் தரப்பு ஆட்சேபிக்கவில்லை; செலவுத் தொகை மட்டும் இனி முடிவாக வேண்டியுள்ளது என அது தெரிவித்தது.

இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று செலவுத் தொகை தொடர்பான தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி Raja Ahmad Mohzanuddin Shah Raja Mohzan தெரிவித்தார்.

ரீசா மற்றும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ள 2 Red Granite நிறுவனங்களே, 1MDB நிதி கையாடப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் என அறிவிக்கக் கோரி அவ்வழக்குத் தொடுக்கப்பட்டது.

மோசடி செய்யப்பட்ட பணமனைத்தும் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் 1MDB கோரியிருந்தது.

ஹோலிவூட்டின் வெற்றிப் படமான The Wolf of Wall Street, இந்த Red Granite நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!