Latestசினிமா

நடிகர் ஜெட் லிக்கு வெற்றிகரமாக நடந்த டியூமர் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – பிரபல நடிகர் ஜெட் லியின் (Jet Li) உடலில் ஏற்பட்ட tumour கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது.

அவர் மருத்துவமனையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, தனது உடல்நலம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் நூடுல்ஸ் (noodles ) சாப்பிடும் புகைப்படத்தையும் பதிவிட்டு, ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அவரது தோழி, இது உயிருக்கு ஆபத்தில்லாத சிறிய கட்டி என சமூக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

சீனாவில் பிறந்த ஜெட் லி, தற்போது சிங்கப்பூர் குடிமகனாக உள்ளார் என்றும் கடந்த 2010 முதல் hyperthyroidism நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!