
கோலாலம்பூர், ஆகஸ்ட்-22- நாடாளுமன்றம் முன் பொது மக்கள் கூடுவதற்கு உரிமை உண்டு என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே, ஒன்றுகூடல்களை அருகிலுள்ள Padang Merbok மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்ற யோசனையை பிரதமர் நிராகரித்ததாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிரமமின்றி உள்ளே வரும், வெளியே செல்லும் வகையில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என அன்வார் அறிவுறுத்தியுள்ளார்.
அதே சமயம், பொதுக் கூட்டங்களுக்கு இன்னொரு தேர்வாக Padang Merbok-க்கை மக்கள் பயன்படுத்தும் வகையில் அதனை மேம்படுத்துமாறு கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபாவிற்கு பிரதமர் உத்தரவிட்டார். வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஃபாஹ்மி அவ்வாறு கூறினார்.
இவ்வேளையில், அண்மையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்த அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது, ஒருங்கிணைப்பு குறைவாலும் போதியத் தகவல்கள் இல்லாததாலும் சலசலப்பு ஏற்பட்டதாகவும், இதில் ஒரு போராட்டத் தலைவர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்ததாகவும் ஃபாஹ்மி ஒப்புக்கொண்டார். அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.