Latestமலேசியா

நாட்டின் மேம்பாட்டில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவீர்; மகளிர் தினத்தில் பிரதமர் அறைகூவல்

கோலாலம்பூர், மார்ச்-9 – நாட்டின் வளர்ச்சியின் அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு போதுமான இடமும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.

கொள்கை வகுப்பு உட்பட முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களின் ஈடுபாடு குறைவாக இருப்பதால், இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

எனவே பெண்களின் கரங்களை வலுப்படுத்த, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து, ஒவ்வொரு அமைச்சும் கவனம் செலுத்தி பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தனியார் பெருநிறுவனங்களிலும் உயர்மட்டப் பதவிகளில் பெண்களின் பங்கேற்புக் குறைவாகவே உள்ளது.

அவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனினும் இவ்விவகாரத்தில் அரசாங்கமே ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும் என அன்வார் சொன்னார்.

ஆனால் அதற்காக இப்போதே அவசர அவசரமாக பெண்களுக்குப் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை; மாறாக சரியான திட்டமிடலுடன் இது மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.

தலைநகர், உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற 2025 அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் அவ்வாறு பேசினார்.

அதில் அவரின் துணைவியார் டத்தோ ஸ்ரீ Dr வான் அசிசா வான் இஸ்மாயில், மகளிர்-குடும்ப-சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி, துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr நொராய்னி அஹ்மாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!