Latestஉலகம்

“நான் கொலை செய்து விட்டேன்” என்ற பயணி; போலீசிடம் சிக்க வைத்த டாக்சி ஓட்டி

பெய்ஜிங், நவம்பர்-22, மத்திய சீனாவில் பேச்சு வாக்கில் டாக்சியோட்டியிடம் தாம் ஒருவரைக் கொலைச் செய்திருப்பதாகக் கூறிய இளைஞன் போலீசிடம் வசமாக சிக்கிக் கொண்டான்.

Wuhan மாகாணத்தைச் சேர்ந்த Yin எனும் டாக்சியோட்டி, நவம்பர் 14-ஆம் தேதி 20 வயது மதிக்கத்தக்க இளைஞனைக் காரில் ஏற்றியுள்ளார்.

1,100 கிலோ மீட்டர் தூரத்தை உட்படுத்திய அந்த நீண்ட பயணத்திற்கு, டாக்சி நிறுவனத்தின் SOP விதிமுறைக்கு ஏற்ப, Yin பயணத்தில் தனக்கு உதவியாக இருக்கும் வகையில் Xia எனும் மற்றோர் ஓட்டுநரையும் ஏற்றிக் கொண்டார்.

300 கிலோ மீட்டர் பயணத்தைத் தாண்டியதும், பயணி வேகமாகப் போகச் சொல்லியுள்ளார்.

சாலையில் பாதுகாப்பாகச் செல்வதன் அவசியம் குறித்து Xia அவ்விளைஞனுக்கு நினைறுத்திய போது, அவனிடமிருந்து வந்த பதில் அதிர வைத்தது.

“நான் ஒருவரைக் கொலைச் செய்து விட்டேன். சீக்கிரமாக என் குடும்பத்தாரைப் பார்த்து நான் பிரியாவிடை பெற வேண்டும்” என தனக்கிருக்கும் அவசரத்தை அவன் கூறியுள்ளான்.

துணை ஓட்டுநர் அதை ஒரு நகைச்சுவையாக எடுத்துகொள்ள, ஓட்டுநர் Yin-னுக்கு சந்தேகம் வரத் தொடங்கியது.

அந்நேரத்தில் Yin-னின் கைப்பேசிக்கு Hubei நகரப் போலீசிடமிருந்து அழைப்பு வந்தது.

காரில் பயணியாக இருப்பது கொலைக் குற்றவாளி என்றும், அவனையும் டாக்சியையும் தாங்கள் பின்தொடருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளியைப் பிடிக்க ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட Yin, காருக்கு charge ஏற்றுவதாகக் கூறி அடுத்த நிலையத்தில் நிறுத்தினார்.

அப்போது அங்கு வந்துசேர்ந்த போலீசார் பயணி உருவிலிருந்த கொலைக் குற்ற சந்தேக நபரை கைதுச் செய்தனர்.

சந்தேக நபரைப் பிடிக்க உதவிய Yin மற்றும் Xia-வின் துணிகரத்தை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டு பதாகையும் ஆளுக்கு 140 டாலரும் பரிசளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!