
மலாக்கா, டிசம்பர் 17 – குற்றவாளி ஒருவரின் காதலிக்கு குற்றப் பதிவுகள் இருப்பதாகத் தான் கூறியிருந்த அறிக்கை சரியானதே என்று மலாக்கா மாநில காவல் துறை தலைவர் டத்தோக் Dzulkhairi Mukhtar உறுதியாக கூறியுள்ளார்.
அந்த பெண்ணுக்கு எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்று குடும்பத்தாரின் வழக்கறிஞர் மறுத்ததைத் தொடர்ந்து, தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
போலீசார் உண்மைச் சான்றுகள் இல்லாமல் எந்த தகவலையும் வெளியிடமாட்டார்கள் என்றும், சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது தன்னுடைய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
அப்பெண்ணுக்கு 10 கைது பதிவுகள் உள்ளன என்றும், எல்லா கைதுகளும் நீதிமன்ற குற்றச்சாட்டாக மாறாது என்றும் அவர் கூறினார்.
தன் கூற்று தவறானது என யாரேனும் கருதினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தான் தவறு செய்திருந்தால், தன் மீது வழக்குப் பதிவு தாராளமாக செய்யலாம் எனவும் அவர் சவால் விடுத்தார்.



