Latestமலேசியா

நாளை முதல் இந்த சனிக்கிழமைவரை போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு – கோலாலம்பூர் போலீஸ்

கோலாலம்பூர், நவ 4 – போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வழங்கப்பட்ட குற்றப் பதிவுகள் அல்லது சம்மன்களுக்கான கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு வழங்குவதற்கு கோலாலம்பூர் போலீஸ் முன்வந்துள்ளது. நாளை முதல் இந்த சனிக்கிழமைவரை போக்குவரத்து விதிகளுக்கான அபராதத்தில் 50 விழுக்காடு கட்டணம் கழிவு வழங்கப்படுகிறது. கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், உதவி ஆணையர் முகமட் சம்சுரி முகமட் இசா ( Mohamad Zamsuri Mohd Isa ) இதனைத் தெரிவித்தார்.
துன் எச் எஸ் லீ போலீஸ் நிலையத்தில் இதற்கான முகப்பிடம் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது சம்மனை சரிபார்த்து ரொக்கமின்றி அபராதத்தை செலுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விபத்து தொடர்பான வழக்குகள், நீதிமன்ற விசாரணை வழக்குகள், சம்மன்கள் கட்டமுடியாத பிரிவுகளுக்கான சாலை விதிமுறைகளான ஆபத்தாக முந்திச் செல்வது, அவசர தடப் பாதையை பயன்படுத்தியது, மற்றும் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளை மீறிய குற்றங்கள் ஆகியவை தள்ளுபடி சலுகையில் சேர்க்கப்படவில்லை என்று முகமட் சம்சுரி கூறினார். மேலும் கனரக வாகனங்கள் தொடர்பான தவறுகள், Ekzos எனப்படும் புகை கக்கிகளை மாற்றியது, Op Selamat தகுதி கொண்ட சாலை குற்றங்கள் மற்றும் இரட்டை கோடுகளை முந்திச் சென்ற குற்றங்களும் சலுகையில் சேர்க்கப்படவில்லை என்று முகமட் சம்சுரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!