நியூயார்க், டிச 23 – ஞாயிற்றுக்கிழமை காலை நியூயார்க் நகர சுரங்கப்பாதை ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை தீ வைத்து எரித்து கொன்றதாகக் ஆடவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
அடையாளம் தெரியாத பெண், புரூக்ளினில் (Brooklyn) உள்ள Coney Island Stillwell Avenue சுரங்கப்பாதை நிலையத்தில் காலை மணி 7.30 மணியளவில் ரயிலில் அமர்ந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் லைட்டர் மூலம் அப்பெண்ணின் உடையில் தீவைத்ததாக நியூயார்க் போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு முன் அந்த இருவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருப்பதாகவும் தாங்கள் நம்பவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சுரங்க ரயில்பதை நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் தீயை அணைக்க விரைந்தபோது அந்த ஆடவர் ரயிலிருந்து கீழே இறங்கினார்.
ரயில் பெட்டிக்குள் பெண் ஒருவர் தீக்குள்ளாகியிருந்ததை போலீசார் பார்த்ததாக நியூயார்க் போலீஸ் கமிஷனர் ஜெசிகா டிஷ் (Jesica Tisch ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திகிலடைந்த பார்வையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் கைதொலைபேசியில் வெளியிட்ட வீடியோவில் தீயில் ஒரு பெண் எரிந்துகொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு நபர் அமர்ந்திருப்பதை காணமுடிந்தது. சம்பந்தப்பட்ட அந்த பெண் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.