
லிவர்பூல், ஆகஸ்ட் 15 – சமீபத்தில் லிவர்பூலில் நடைபெற்ற 2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில், 60 வயதான கிராண்ட்மாஸ்டர் பீட்டர் வெல்ஸை வீழ்த்தி, 10 வயது சிறுமி ‘கிராண்ட்மாஸ்டரை’ தோற்கடித்த புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்தி, அமெரிக்க வீராங்கனை கரிசா யிப் 2019 இல் படைத்த சாதனையை இச்சிறுமி முறியடித்திருக்கின்றார்.
கோவிட்-19 காலகட்டத்தில், அவரது பெற்றோருக்கு சதுரங்கம் விளையாடத் தெரியாத போதிலும், அச்சிறுமியின் அபூர்வ திறமை வெளிப்பட தொடங்கியதை அவர்கள் கண்டறிந்தனர்.
துல்லியமான நகர்வுகள் மூலம் தோல்வி அடையும் நிலையிலிருந்து வெற்றி கண்டு, ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை அவர் உறுதி செய்துள்ளார்.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE), பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்திற்குப் பிறகு பெண்களுக்கான இரண்டாவது மிக உயரிய பட்டமான ‘பெண் சர்வதேச மாஸ்டர்’ (WIM) பட்டத்தையும் சிறுமிக்கு வழங்கியுள்ளது.
சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் என்பது மிக உயர்ந்த பதவியாகும் எனபது குறிப்பிடத்தக்கது.