Latestமலேசியா

நீதித்துறை சுதந்திரம்; எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியதை அன்வார் கட்டிக் காக்க வேண்டும் – தெங்கு மைமுன்

கோலாலம்பூர், ஜனவரி 24 – நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி எனும் பெருமை கொண்ட Tengku Maimun இவ்வாண்டு ஜூலை மாதத்தில் 66 வயதை எட்டும் பட்சத்தில் கட்டாய ஓய்வு பெறவிருக்கிறார்.

நாட்டின் நீதித் துறையின் மீதான நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதில் இவரின் பங்கு மிகப் பெரியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
யாருடைய அழுத்தத்திற்கும் ஆளாகாமால் நீதியை நிலைநாட்டுவதில் மிக நேர்த்தியாக பணியாற்றியவர் Tengku Maimun.

உதாரணத்திற்கு இந்திரா காந்தி வழக்கில் இஸ்லாத்துக்கு மாறிய தமது முன்னாள் கணவரிடம் இருந்து அவரது மகளை தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனும் கூட்டரசு நீதிமன்றம் எடுத்த முடிவு முற்றிலும் நீதி மற்றும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதென அவர் விளக்கினார்.

பலர் தாம் அவ்வழக்கில் இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினாலும் தம் சமய நம்பிக்கை மீது கேள்வி எழுப்பினாலும் அது மதம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல நடுநிலையாக நீதியை நிலைநாட்டுகின்ற விவகாரம் என விளக்கமளித்தார்.

தம் பதவி காலத்தில் நீதித்துறையின் மாண்பை கட்டிக்காப்பதில் மிக தைரியமாக செயல்பட்ட Tengku Maimun அரசாங்கமும் தலைவர்களும் அதனை தற்காக்க என்ன செய்ய வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பை அண்மையில் வெளிப்படுத்தினார்.

அதில், தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராஹிம், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயம், அன்றைய அரசாங்கம் நீதித்துறை சீர்த்திருத்தம் செய்தபோது, நீதித்துறை நியமனங்களில் அரசியல் தலையீடு இருக்ககூடாது என கண்டித்திருந்ததை தெங்கு மைமுன் நினைவுக்கூர்ந்தார்.

நீதித்துறை நியமன ஆணையச் சட்டம் 2009 குறித்து, 2008ஆம் ஆண்டில் விவாதித்த போது, இச்சட்டம் நீதித்துறை நியமன சுதந்திரத்தில் அரசியல் தலையீடே இருக்கக்கூடாது என அன்வார் வலியுறுத்தியிருத்தியிருந்ததாக மைமுன் தெரிவித்தார்.

இப்போது அச்சட்டம் அமலுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதனை அன்வாரும் அவரது அரசாங்கமும் சொன்னபடி நீதித்துறை சுதந்திரத்திற்கு எந்த ஒரு பங்கமும் வராமல் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் VK லிங்கம்
விவகாரத்தில் கூட அன்வாரின் விவாதத்தையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதுபோல் தோற்றம் இருப்பதாக முன்பு அன்வார் கூறியிருந்தாக அவர் கூறினார்.

அந்த அடிப்படையில், நியமன விவகாரங்களில் அது போன்ற தோற்றம் இருக்கக்கூடாது.

அப்படி இல்லாவிட்டால், நீதித்துறை சுதந்திரத்தின் மீது, பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் என தெங்கு மைமுன் கூறினார்.

அந்த அடிப்படையில், அடுத்து தலைமை நீதிபதி நியமனம் சட்ட்த்திட்டங்களுக்கு உட்பட்டு யாருடைய தலையீடும் இல்லாமல் இருக்க வேண்டும் என Tengku Maimun எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!