
நீலாய், நவம்பர்-8 – நெகிரி செம்பிலான், நீலாயில் பராமரிப்பாளரிடம் விடப்பட்ட 7 மாத ஆண் குழந்தை, தொட்டிலில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bandar Enstek அருகேயுள்ள KLIA குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காக பராமரிப்பாளர் தட்டி எழுப்ப முயன்ற போது, அது உடல் அசைவின்றி கிடந்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது உறுதியானது.
போலீசாரின் தொடக்கக் கட்ட விசாரணையில் குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சவப்பரிசோதனையிலும், குழந்தையின் உடலில் உட்புற வெளிப்புற காயங்கள் கண்டறியப்படவில்லை.
குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை உறுதிச் செய்ய முடியாததால், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகபோலீஸ் கூறியது.