Latestமலேசியா

நீலாயில் பெரும் வெடிச்சத்தம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்; விசாரணையைத் துவங்கிய போலீஸ்

நீலாய், டிசம்பர் 22 – நீலாய் டேசா பால்மா குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெடிச்சத்தத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர்.

அப்போது சாலையில் ஆணிகளும் வெடிப்பு சிதறலால் சேதமடைந்த வாகனங்கள் இருப்பதையும் அவர்கள் கண்டனர் என்று நீலாய் மாவட்ட துணை காவல் துறை தலைவர் Superintendan Mohamad Asiff Jamaldin தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்தவும் விசாரணைக்கு உதவவும் தீயணைப்பு துறை அழைக்கப்பட்ட நிலையில் வெடித்த பொருள் எது என்பதை கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதோடு கூடுதல் தகவல்களை நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!