
நீலாய், டிசம்பர் 26-டிசம்பர் 22-ஆம் தேதி நெகிரி செம்பிலான் நீலாய், டேசா பால்மா குடியிருப்பில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பின்னால் 62 வயது இயோ ஹோக் சன் (Yeoh Hock Sun) என்பவர் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் மிகவும் ஆபத்தானவர் என்றும், தீவிரமாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்றும் போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
அவ்வெடிப்பில் பல வாகனங்கள் சேதமடைந்தன; பின்னர் அருகிலுள்ள கடைத்தொகுதியில் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட 31 வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை 20 மீட்டர் சுற்றளவில் சேதம் ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்ட இரும்பு பந்துகள், ஆணி, கத்தி துண்டுகள் போன்றவற்றால் நிரப்பப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேதியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பின்புலம் கொண்ட சந்தே நபர், தொடக்க வெடிப்பில் காயமடைந்து தப்பிச் சென்றதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
பிடிபடுவதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக, முகமூடி, தொப்பி, தோட்ட முடி போன்றவற்றுடன் அவர் மாறுவேடங்களில் மறைந்து கொண்டிருக்கலாம்.
எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



