Latestமலேசியா

நெடுஞ்சாலைகளில் AI வேக கண்காணிப்பு பரிசோதனை ஜூனில் தொடக்கம்

கோலாலம்பூர், மார்ச் 24 – வேக வரம்பு மீறல்களைக் கண்டறிவதற்கான பயண நேரம் மற்றும் தூரத்தை அளவிடுவதற்காக தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட புள்ளிக்கு புள்ளி என்ற முறை ஜூன் மாதத்திற்குள் முன்னோடி சோதனையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையான முறையை மாற்றும் நோக்கில், செய்ற்கை நுண்ணறிவான AI யை பயன்படுத்தி மேற்கொள்ளும் இந்த சோதனை திட்டம் , கெந்திங் Sempah சுரங்கப்பாதையில் இருந்து கோம்பாக் ஓய்வு நிறுத்தம் இடம் வரை மற்றும் செனாவாங் டோல் (Senawang Toll ) பிளாசாவிலிருந்து சிம்பாங் ஆம்பட் டோல் பிளாசா (Simpang Ampat Toll Plaza )(அலோர் கஜா) வரை இரண்டு நெடுஞ்சாலை வழிகளைக் கண்காணிக்கும்.

கூடுதலாக, மெனோரா (Menora) சுரங்கப்பாதையில் இருந்து சுங்கை பேராக் (Sungai Perak) ஓய்வு நிறுத்தம் இடம் போன்ற நீண்ட பகுதிகளில் விபத்துக்குள்ளாகும் இடங்களில் இந்த அமைப்பு நிறுவப்படும் என போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Jana Santhiran Muniayan தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எந்த நிதி தாக்கமும் இல்லாமல், இந்த அமைப்பு தொடர்பான கருத்துக்களை பெறுவதற்கு ஒரு நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் சுங்கச்சாவடிகளில் நிறுவப்பட்டுள்ள இந்த அமைப்பு, தூரத்தின் அடிப்படையில் பயண நேரத்தை பதிவு செய்யும்.

உதாரணமாக, கோலாலம்பூரின் ஜாலான் டுத்தாவிலிருந்து பேராவின் தஞ்சோங் மாலிமிற்கு பயணிக்கும் ஓட்டுநர் மதிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக வந்தால், இம்முறையின் கீழ் அவர்களின் வாகனத்தின் உரிமத் தகடு கண்டறியப்பட்டு சம்மன் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

கண்டறிதலைத் தவிர்க்கும் முயற்சியில் ஒரு ஓட்டுநர் தங்கள் பயண நேரத்தை நீட்டிக்க எந்த இடத்திலும் நிறுத்தியுள்ளாரா என்பதை AI- மூலம் இயங்கும் முறையினால் கண்டறிய முடியும் என்று Jana சந்திரன் விளக்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!