கோலாலம்பூர், டிசம்பர்-6, மலேசிய நெடுஞ்சாலையொன்றில் ஒரு பெரிய லாரியிலிருந்து கழன்றியதாக நம்பப்படும் டயர் சாலை நடுவே உருண்டோடும் வீடியோ வைரலாகியுள்ளது.
நல்ல வேளையாக அதன் போது போக்குவரத்து பரபரப்பாக இல்லை.
வாகனங்களுக்கு இடையில் நல்ல இடைவெளி இருந்ததால், சுதாகரித்துக் கொண்ட வாகனங்கள் டயரை மோதாமல் பார்த்துக் கொண்டன.
இதனால் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.
சற்று தூரம் உருண்டோடி ‘களைத்துப்’ போன டயர் அதுவாகவே சாலையோர கால்வாயில் விழுந்து விட்டது, பின்னால் வந்த வாகனத்தின் dash cam-மில் பதிவாகியுள்ளது.
டயருக்குச் சொந்தக்கார லாரிக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை.