
புத்ராஜெயா, ஜனவரி-27 – புத்ராஜெயாவில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நெல் விவசாயிகளின் பேரணி, அரசு முறைப் பயணமாக மலேசியா வரும் இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவின் (Prabowo Subianto) பயணத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
அப்பேரணியைத் தாம் தடுக்கவில்லை; என்றாலும் பொருத்தமான வேறொரு தேதியிலும் நேரத்திலும் அதனை நடத்தியிருக்கலாமென்றார் அவர்.
அரிசியின் தரை விலையை மெட்ரிக் டன்னுக்கு 1,800 ரிங்கிடாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, நாடு முழுவதிலுமிருந்து 1,000க்கும் மேற்பட்ட நெல் விவசாயிகள் இன்று திங்கட்கிழமை
புத்ராஜெயாவில் ஒன்றுகூடி மகஜர் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதே சமயம், மாமன்னரின் அழைப்பை ஏற்று இந்தோனீசிய அதிபரும் இன்று கோலாலம்பூர் வருகிறார்.
நேற்று இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிராபோவோ, தாயகம் திரும்பும் வழியில் மலேசியா வருகிறார்.