
கோலாலம்பூர், மார்ச் 20 – நோன்பு பெருநாளை முன்னிட்டு Aidilfitri கொண்டாட்டத்துடன் இணைந்து மின்சார ரயில் சேவைகளுக்கான (ETS) அதிக தேவைக்காக KL சென்ட்ரல்-பட்டர்வொர்த் மற்றும் KL சென்ட்ரல்-படாங் பெசார் வழித்தடங்களுக்கு நான்கு கூடுதல் சேவைகளை வழங்கவிருக்கிறது.
Aidilfitriக்கு இரண்டு நாட்களுக்கு முன்னும் பின்னும் முறையே மார்ச் 28 மற்றும் மார்ச் 30 , ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவை உள்ளடக்கியிருப்பதாக KTMB வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சேவை ஒரு நாளைக்கு மொத்தம் 1,254 இருக்கைகளை வழங்குவதோடு இதில் வணிக வகுப்பு இருக்கைகளின் தேர்வும் அடங்கும்.
பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 5,016 இருக்கைகள் இந்த நோன்பு பெருநாள் காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த கூடுதல் ரயில் டிக்கெட்டுகள் இன்று மார்ச் 20 ஆம்தேதி காலை 10 மணிக்கு விற்பனைக்கு வந்ததாக KTMB வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததைத் தொடர்ந்து மார்ச் 28 முதல் ஏப்ரல் 6 வரை நான்கு கூடுதல் ETS சேவைகளை வழங்கியதாக மார்ச் 3ஆம் தேதி கே.டி.எம்.பி தெரிவித்திருந்தது.
இந்த காலக்கட்டத்தில் பயணிகளின் தேவையை நிறைவு செய்வதற்காக 12,600 இருக்கைகளுக்கான இடங்களை
கே.டி .எம்.பி பூர்த்தி செய்ய வழங்குகிறது.
மார்ச் 28 ஆம்தேதி முதல் ஏப்ரல் 6ஆம்தேதிவரை மொத்தம் 117,996 இருக்கைகளுடன் ஒரு நாளைக்கு 40 ரயில்கள் சேவையில் ஈடுபடும் .
திறமையான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான KTMB இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.
இதன் மூலம் மலேசியர்களுக்கான பொது போக்குவரத்து வசதியின் முக்கிய தேர்வாக ரயில் சேவையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை KTMB ஆதரிக்கிறது.
KTMB பயனர்கள் டிக்கெட்டுகளை முன்கூட்டியே பெறவும், கடைசி நிமிடத்தில் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறது.
நுழைவாயிலில் ஆவணங்கள் மற்றும் ஆய்வுகளை எளிதாக்குவதற்கு பயனர்கள் முன்கூட்டியே நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் ஒரு மென்மையான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்கிறது.