நோபல் பரிசுக்கு தம்மை மோடி ஆதரிக்க மறுத்ததே இந்தியா மீது ட்ரம்ப் 50% விரியை திணிக்கக் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்

நியூ யோர்க், செப்டம்பர்-1 – இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னால் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இருந்தார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க மறுத்ததே, வாஷிங்டன் புது டெல்லி மீது 50% வரி விதிப்பைத் திணிக்கக் காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில், ட்ரம்ப் மோடியை தொலைப்பேசியில் அழைத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இராணுவ விரோதங்களை நிறுத்தியதற்காக தாம் பாராட்டப்பட வேண்டும் என சூசகமாகக் குறிப்பிட்டாராம்.
இஸ்லாமாபாத் தம்மை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் போகிறது என்பதையும் குறிப்பிட்ட ட்ரம்ப், புது டெல்லியும் தம்மை ஆதரிக்க வேண்டும் என கேட்டாராம்.
ஆனால் அதற்கு மோடி ஒப்புக்கொள்ளவில்லை; இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என ஆரம்பம் முதலே கூறி வரும் மோடி, மோடியின் கோரிக்கையை நிராகரித்தார்.
இதனால் ஏற்பட்ட கோபத்தையே, இந்தியாவுக்கு 50% வரி விதித்து ட்ரம்ப் தீர்த்துக் கொண்டார் என New York Times செய்தி வெளியிட்டுள்ளது.
நெருங்கிய பங்காளி என மோடியை அழைத்து ‘ராஜ உபரிப்பு’ வழங்கி வந்த ட்ரம்ப், திடீரென அவரையும் இந்தியாவையும் பகைவராகப் பார்ப்பதற்கான காரணத்தை இந்த அதிர்ச்சி செய்தி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட இதுவரை 7 போர்களை தாம் நிறுத்தியுள்ளதாக ‘மார்தட்டும்’ ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு இவ்வாண்டு தமக்கே வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாகவே கூறி வருகிறார்.