
கோலாலம்பூர், செப்டம்பர்-25,
spa புத்துணர்ச்சி மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியாக செயல்பட்டு வந்த மையங்களில் கோலாலம்பூர்
குடிநுழைவுத் துறை நடத்திய சோதனைகளில், 28 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பகலில் வழக்கமான உடம்புபிடி மையங்களாக செயல்பட்டு, இரவு நேரங்களில் பாலியல் சேவைகளை வழங்கி மாதம் சுமார் RM300,000 வரை அவை வருமானம் ஈட்டியது விசாரணையில் தெரியவந்தது.
வாடிக்கையாளர்களிடம்RM200 முதல் RM350 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கைதுச் செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து, மியன்மார், இந்தோனேசியா, வியட்நாம், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் சிலரது விசா காலாவதியாக இருந்த நிலையில், சிலரிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை.
இரண்டு வார கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல் அடிப்படையில், 55 அதிகாரிகள் பங்கேற்ற சோதனைகளில் கைதான அனைவரும், தற்போது KLIA குடிநுழைவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், 7 வாடிக்கையாளர்களுக்கும் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.