
கோலாலம்பூர், ஜூலை-16- பங்சாரில் உள்ள கட்டுமானத் தளமொன்றில் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டுக் கொண்ட 9 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது. எனினும் அதில் யாருக்கும் காயமேற்பட்டதா என்பது குறித்து மேல் தகவல்கள் இல்லை.
கைதானவர்கள் 24 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.அவர்கள் ஜூலை 18 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் விசாரணை நடைபெறுவதாக, பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் கூறியது.
சண்டையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 6 பாதுகாப்பு தலைக்கவசத் தொப்பிகள், 3 இரும்புக் கம்பிகளும் சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.