
கோலாலம்பூர், அக்டோபர்-13 – மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு 2026ஆம் ஆண்டுத் தேசிய பட்ஜெட்டின் கீழ் லாடாங் ஜெராம் தமிழ்ப்பள்ளி குவாந்தான், கட்டுமான அங்கீகாரம் வழங்கப்பட்டதற்காக
எங்கள் மனமார்ந்த நன்றியை கல்வி அமைச்சரான மாண்புமிகுபுவான் பட்லினா சிடேக், டிஜிட்டல் அமைச்சரான மாண்புமிகு கோபிந்த் சிங் தியோ,
மற்றும் கல்வி துணை அமைச்சரான மாண்புமிகு வோங் கா வா அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக, 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஜெராம், குவாந்தான் தமிழ்ப்பள்ளி கட்டுமானம் 2026 தேசிய பட்ஜெட்டின் கீழ் இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இது சமூக நலனுக்கான முக்கிய முன்னேற்றம் இந்தப் பள்ளி, இந்திய மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிக்கு அருகில் அமைக்கப்படுவதால், கல்வி சமத்துவத்தையும் சமூக முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும்.
இந்த முக்கிய சாதனை, பக்காத்தான் ஹராப்பான் அரசின் கீழ் உருவாகும் முதல் புதிய தமிழ்ப்பள்ளி என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளது. இது தமிழ்க் கல்வி சமத்துவம் மற்றும் சேர்க்கை நோக்கில் எடுத்த வலுவான ஒரு படி ஆகும்.
எதிர்காலத்தில் மேலும் பல தமிழ்ப்பள்ளிகள்நாட்டின் பல பகுதிகளில் மேம்படுத்தப்பட்டோ, இடமாற்றம் செய்யப்பட்டோ, இந்திய சமூகத்தின் கல்வி தேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படும் என நாங்கள் நம்புகிறோம்.
அர்ப்பணிப்புக்கான நன்றி ஜெராம் தமிழ்ப்பள்ளியின் எல்.பி.எஸ் தலைவரான டத்தோ நடேசன் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளுக்கும் உறுதியான அர்ப்பணிப்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல் கல்வி துணை அமைச்சரின் சிறப்பு உதவியாளர் திரு. இளங்கோவன் அவர்களின் ஆவண ஒருங்கிணைப்பு மற்றும் அங்கீகார முயற்சிகளுக்கும் தீவிர உழைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக ஒற்றுமையின் பலன் இந்த வெற்றி, நாடளாவிய தமிழ்ப்பள்ளிகள், என்.ஜி.ஓ.க்கள், சமூக தலைவர்கள், மற்றும் இயக்கத்தின் தொடர்ச்சியான ஒற்றுமையான ஆதரவு மற்றும் போராட்டத்தின் பலனாகும்.
தமிழ்க் கல்வியை வலுப்படுத்தவும், சமூகத்தை உயர்த்தவும் நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவோம் என மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு
மற்றும் நலனபிவிருத்திச் சங்கம் & மலேசிய தமிழ்ப் பள்ளிகளின் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் செயலாகாத் தலைவர் வெற்றிவேலன் தெரிவித்தார்.