நீலாய், அக்டோபர்-16 – ஏற்கனவே இரு குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்த ஆடவன், நெகிரி செம்பிலான், மந்தினில் ஊரார் வீட்டுத் தோட்டத்தில் பலா பழம் திருடி மீண்டும் போலீசிடம் மாட்டிக் கொண்டான்.
நேற்று பிற்பகலில் தனது பலா தோட்டத்தில் மர்ம நபர்கள் அத்துமீறியதாக அதன் உரிமையாளர் முன்னதாக போலீசில் புகார் செய்தார்.
பலா பழங்களைப் பொட்டலமிடும் பெட்டிகள் திறந்து கிடப்பதை கண்ட பிறகே தோட்டப் பணியாளர்கள் திருடர்கள் புகுந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
30 வயது மதிக்கத்தக மர்ம நபரைப் பணியாளர்கள் விரட்டிப் பிடித்த வேளை, மற்றொருவன் தப்பியோடி விட்டான்.
கைதானவன் 3 நாட்களுக்கு விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டான்.
தப்பியோடியவனைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.