Latestமலேசியா

பத்துமலை தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு செலயாங் நகரான்மைக் கழகத்தின் கடைகள் விற்பனை மற்றும் அதற்கான குலுக்கல்

கோலாலம்பூர், ஜன 23- பத்துமலை தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு MPS எனப்படும் செலயாங் நகரான்மைக் கழகம் தனது விதிமுறைக்கு ஏற்ப கடை இடங்களுக்கான விற்பனை மற்றும் அதற்கான குலுக்கலை நடத்தவிருக்கிறது.

பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிமை காலை 9 மணி தொடங்கி நண்பகல் 1.00 மணிவரை Taman ஸ்ரீ கோம்பாக்கில் (Sri Gombak) உள்ள பெரிங்கின் (Beringin) மண்டபத்தில் கடை வாடகைக்கு வழங்குவது மற்றும் அதற்கான இடத்திற்கு குலுக்கல் நடைபெறும்.

பொது விற்பனை, உணவுகள்,பானங்கள் மற்றும் மருதானி போடுவதற்கான இடத்திற்கு குலுக்கள் நடைபெறும் இடத்தில் கட்டணம் 240 ரிங்கிட்டாகும்.

அதே வேளையில் பிப்ரவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் அலுவலகத்தில் வேறு கட்டணமும், 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரைக்குமான விற்பனை மையத்திற்கான கட்டணம் வேறு விதமாகவும் இருக்கும்.

உணவுகள் மற்றும் பானங்கள் விற்பனைக்கு 128 கடைகளும், தைப்பூசத்தின் பரபரப்பான இடத்தில் 47 கடைகளும் ,சிகையலங்காரம் மற்றும் பச்சை குத்துவதற்கு 16 கடைகளும் , நடமாடும் வாகனங்களில் வர்த்தகம் புரிவதற்கு 10 இடங்களும், தற்காலிக மாலைகள் விற்பனைக்கு 19 கடைகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 30 விழுக்காடு கழிவு கட்டணத்தோடு 15 கடைகளும், அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு 28 கடை இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களுடன் செலயாங் நகரான்மை கழகம் அல்லது இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 03-6126 5940/5942 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!