Latestமலேசியா

பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், நவ 20 – பத்துமலைக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. சுமார் 23 லட்சம் ரிங்கிட் செலவில் மிகவும் அழகாக நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தில் ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஆலயத்தின் தலைவர் யுவராஜா குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ம.இ.கா வின் துணைத்தலைவரும் முன்னாள் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலேசியாவிலேயே ஐயப்ப பக்தர்கள் ஆலயம் என்றால் நமது நினைவுக்கு வருவது பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலாயம்தான் என்பதில் மாறுபட்ட கருத்து எதுவுமில்லையென டத்தோஸ்ரீ சரவணன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

இதனிடையே இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டது குறித்து ஆலயத்தின் தலைவர் யுவராஜா கும்புசாமி மகிழ்ச்சியை தெரிவித்தார். ஆலய நிர்வாகம் எதிர்ப்பார்த்ததை விட அதிகமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டது தமக்கு வியப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஐயப்ப குருமார்களும், ஐயப்ப பத்தர்களும் வணக்கம் மலேசியாவிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தை மலேசியா முழுவதிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் திருத்தலமாகவே கருதுகின்றனர். இந்த ஆலயம் வசதியற்ற ஏழை மக்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருவதால் ஆனமீகத்திற்கு அப்பாற்பட்டு அதன் சமூக சேவை தொடர வேண்டும் என பத்தர்கள் விரும்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!