Latestமலேசியா

பத்து காஜாவில் பள்ளி மாணவி கும்பலாகக் கற்பழிப்பு; 5 ஆடவர்கள் கைது

பத்து காஜா, அக்டோபர்-24 – பேராக், பத்து காஜாவில் வயது குறைந்த பெண்ணைப் கும்பலாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 5 ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.

திங்கட்கிழமை பள்ளி முடிந்து வெகுநேரமாகியும் 15 வயது மகள் வீடு திரும்பாததால் தாய் செய்த புகாரை அடுத்து, போலீஸ் விசாரணையில் இறங்கிய போது அச்சம்பவம் அம்பலமானது.

காணாமல் போன அன்று, பத்து காஜாவில் காதலனைப் பார்ப்பதற்காகச் சென்ற அம்மாணவி அவருடன் ஊர் சுற்றினார்.

பின்னர் புதிதாக ஓர் ஆடவனுடன் அறிமுகமேற்பட்டு, ஒன்றாக சாப்பிட்டு விட்டு, அவனுடனேயே அவன் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றாள்.

அங்கு சற்று நேரம் தங்கி ஓய்வெடுக்குமாறு அவ்வாடவர் காலி அறையைக் கொடுத்து விட்டுச் செல்ல, அதே வீட்டில் தங்கியிருந்த இதர 5 ஆடவர்கள் அப்பெண்ணின் அறைக்குள் புகுந்து அவளை மாற்றி மாற்றிக் கற்பழித்தனர்.

மறுநாள் பத்து காஜா போலீஸ் அந்த ஆசிரமத்தை அடையாளம் கண்டு அம்மாணவியை மீட்டது.

மாணவி கொடுத்த தகவலின் பேரில் 18 முதல் 27 வயதிலான 5 சந்தேக நபர்களும் கைதாகினர்.

கும்பலாகக் கற்பழித்தக் குற்றத்திற்காக 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பிள்ளைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு போலீஸ் பெற்றோர்களை அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!