
கோலாலம்பூர், நவம்பர் 4 –
இன்று காலை, மேல்தள மின்கம்பி (overhead line) பிரச்சினையால் ஏற்பட்ட மின்சாரம் தடை காரணத்தினால், ‘Batu Tiga’ மற்றும் சுபாங் ஜெயா (Subang Jaya) இடையிலான KTM சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மின்தடை ஏற்பட்டதால், ‘Batu Tiga’, ஷா ஆலாம் மற்றும் படாங் ஜாவா ஆகிய நிலையங்களில் 4 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டதென KTMB குறிப்பிட்டது.
அதே நேரத்தில், Setia Jaya நிலையத்திலிருந்து KL Sentral நோக்கி செல்லும் ரயில்கள், வழக்கம்போல இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக, KTMB, பேருந்து சேவையை வழங்கியுள்ளத்தைத் தொடர்ந்து, பயணிகள் Batu Tiga, ஷா ஆலாம், மற்றும் படாங் ஜாவா நிலையங்களிலிருந்து சுபாங் ஜெயா நிலையம் வரை தாராளமாக பயணிக்கலாம்.
மேலும் பயணிகள் மாற்று போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்திய KTMB, தங்களால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.



