Latestமலேசியா

பத்து பஹாட்டில் சிவப்பு எச்சரிக்கை விளக்குப் பகுதியில் கார் மோதியது அண்மையில் நிச்சயிக்கப்பட்டவர் மரணம்

பத்து பஹாட், டிச 6 – பாரிட் ராஜாவுக்கு (Parit Raja) அருகே ஜாலான் குளுவாங்கில் (Jalan Kluang) சாலை எச்சரிக்கை விளக்குப் பதியில் நிகழ்ந்த விபத்தில் அண்மையில் நிச்சயம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். உடலின் உள்ள பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் தனது 23 வயது நண்பரான முகமட் ரஸிலிட் ( Muhammad Rasylid ) இறந்தார் என இந்த விபத்தை நேரில் பார்த்தவரான Mohamad Aliff Najmi தெரிவித்தார். தாமான் யூனிவர்சிட்டியில் (Taman University) வீட்டு அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடையில் வேலை முடிந்து பாரிட் ராஜாவுக்கு தாங்கள் உணவருந்தச் சென்றபோது பெண்மனி ஒருவர் ஓட்டிவந்த பெரோடுவா விவா (Perodua Viva) கார் சாலை எச்சரிகை விளக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிளை மோதியதில் அதனை ஓட்டிய முகமட ரஸிலிட் ( Muhammad Rasylid ) விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக முகமட் அலிப் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!