Latestமலேசியா

பத்து பஹாட்டில் வீட்டு சமையலறையில் நாகப்பாம்பு தீண்டியது; 5 நாட்கள் உயிருக்குப் போராடிய பாலர் பள்ளி ஆசிரியை மரணம்

பத்து பஹாட், டிசம்பர்-8 – ஜோகூர் பத்து பஹாட்டில் விஷத்தைத் துப்பும் கருப்பு கழுத்து நாகப்பாம்பு (black-necked spitting cobra) தீண்டிய 5 நாட்களுக்குப் பிறகு பாலர் பள்ளி ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

Aznon Sapin @ Mohd Said எனும் 56 வயது அம்மாது, பத்து பஹாட் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமானையில் சனிக்கிழமை காலை மரணமடைந்தார்.

பாம்பு கடித்து சுயநினைவை இழந்ததிலிருந்து அவர் அங்கு தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று இரவு குடும்ப நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டு சமையலறையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, தனது தாயார் பாம்புக் கடிக்கு ஆளானதாக அவரின் மகள் கூறினார்.

காலில் பாம்பு கடித்ததும் வலியில் வரவேற்பறைக்கு அலறியோடிய அஸ்னோன், சிறிது நேரத்தில் நகர முடியாமல், பார்வையும் மங்கி, மருத்துவமனையை அடையும் போது சுயநினைவை இழந்திருந்தார்.

10 நிமிடங்களுக்கு மருத்துவர்கள் CPR முதலுதவி சிகிச்சை செய்த பிறகு நாடித் துடிப்பு மீண்டு, அவர் ICU-வில் அனுமதிக்கப்பட்டார்.

3 நாட்கள் கழித்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அஸ்னோன் கடைசி வரை சுயநினைவுக்குத் திரும்பாமலேயே உயிரை விட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!