Latestமலேசியா

பந்தாய் ரெமிஸில் மாணவியை காரினால் மோதி கொல்ல முயன்ற ஆடவன் கைது

மஞ்சோங், அக் 24 – பந்தாய் ரெமிஸில், இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவரை காரினால் மோதி கொல்ல முயன்றதன் தொடர்பில் வேலையில்லாத ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

அந்த நபர் நேற்று மாலை மணி 5.30 அளவில் புரோடுவா மைவி காரை ஓட்டிச் சென்றபோது பந்தாய் ரெமிஸ், தாமான் பிந்தாங்கிலுள்ள கூடைப்பந்து திடலின் நுழைவாயிலில் மோதினான். அதன் பின் தனது காரை திருப்பி அங்கிருந்த இடைநிலைப் பள்ளியை நோக்கி காரை ஓட்டியதோடு அப்பள்ளி மண்டபப் பகுதியில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த முதல் படிவ மாணவியை மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

காலில் காயத்திற்கு உள்ளான 13 வயதுடைய அந்த மாணவி Seri Manjung மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான்
(Hasbullah Abdul Rahman ) தெரிவித்தார்.

மாலை மணி 6.50 அளவில் 47 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதோடு அவனது புரோடுவா மைவி காரும் பறிமுதல் செய்யப்பட்டது . மனநிலை சீராக இல்லாததால் ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு கண்காணிப்பிற்காக அந்த சந்தேக நபர் அனுப்பிவைக்கப்பட்டதோடு அவனுக்கு எதிராக தண்டனை சட்டத்தின் 307 ஆவது விதியின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹஸ்புல்லா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!