
அசுன்சியோன், பராகுவே, நவம்பர்-1,
தென்னமரிக்க நாடான பராகுவேயில் 68 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடியின் மின்படிகட்டில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது.
கார் நிறுத்துமிடத்திலிருந்து நேராக கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, மின்படிகட்டில் கார் செங்குத்தாக விழுந்துகிடப்பதை, வைரலான வீடியோக்களில் காண முடிகிறது.
காரோட்டியும் உடன் பயணித்த 71 வயது மூதாட்டியும் பின்னர் காரிலிருந்து மீட்கப்பட்டு சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இருவரும் சீரான உடல்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
எண்ணெயை அழுத்தும் பெடல் திடீரென சிக்கிக் கொண்டதால், பிரேக் வைக்க இயலாமல் போனதாக காரோட்டி பின்னர் தெரிவித்தார்.
மீட்புப் பணியாளர்கள் கிரேன் உதவியுடன் காரை வெளியே எடுக்க முயன்றும் வெற்றிப் பெறவில்லை.
இவ்விபத்து சில மணி நேரங்களுக்கு பேரங்காடியில் பரபரப்பை ஏற்படுத்தியது; ஆனால் வேறு யாரும் காயமடையவில்லை.



