கோலாலம்பூர், டிசம்பர்-6, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வின் கணினி முறையில், இன்று மாலை 6 மணி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
அக்காலம் நெடுகிலும் mySIKAP செயலி மற்றும் JPJ-வின் இணைய அகப்பக்கச் சேவைகள் தடைபடலாம்.
பாதிக்கப்படும் சேவைகளில், மாநில மற்றும் கிளை JPJ அலுவலகங்கள் மற்றும் UTC ஓரிட சேவை மையங்களில் உள்ள JPJ சேவை முகப்புகள், JPJ கைப்பேசி செயலி, MyJPJ செயலி, JPJeBid உள்ளிட்டவையும் அடங்கும்.
இது தவிர்த்து JPJ kiosk இயந்திரங்கள், VEP எனப்படும் வாகன நுழைவுக்கான பெர்மிட் மற்றும் eWallet கட்டணம் செலுத்தும் சேவையும் பாதிக்கப்படலாம்.
சேவைத் தடங்கலுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் JPJ கூறியது.
ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்குப் பிறகு சேவை மீண்டும் வழக்கத்திற்குத் திரும்புமென முகநூல் பக்கத்தில் அத்துறை தெரிவித்தது.