Latestஉலகம்

பரீட்சையில் தோல்வி; சீனாவில் மாணவன் நடத்தியக் கத்திக் குத்து தாக்குதலில் 8 பேர் பலி 17 பேர் காயம்

பெய்ஜிங், நவம்பர்-17 – கிழக்கு சீனாவில் உள்ள தொழில் பயிற்சி கல்லூரியில் முன்னாள் மாணவன் நடத்தியக் கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமுற்றனர்.

காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

21 வயது கொலையாளியை போலீசார் உடனடியாகக் கைதுச் செய்தனர்.

இவ்வாண்டு படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டிய அம்மாணவன் தேர்வில் தோல்வி கண்டதால் பெரும் விரக்தியிலிருந்துள்ளான்.

அது கோபமாக தலைக்கேறவே, பள்ளிக்குத் திரும்பி அவன் அத்தாக்குதலை மேற்கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் அண்மையக் காலமாகவே இது போன்ற அதிக உயிரிழப்புகளைப் பதிவுச் செய்யும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரம் கூட 62 வயது முதியவர் தனது SUV காரை, உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களின் கூட்டத்தில் மோதி 35 பேர் மரணமடையக் காரணமாக இருந்தார்.

அக்டோபரில் ஷங்ஹாயில் நடந்த சம்பவத்தில், சூப்பர் மார்கெட்டில் மர்ம நபரால் மூவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!