உத்திரப்பிரதேசம், செப்டம்பர் 27 – உத்தரப் பிரதேசத்தின் தனியார் பள்ளி ஒன்றில், பெரியளவில் செழிப்பும் புகழும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, 2ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
யாரோ ஒருவர் சொன்னதை நம்பி, அப்பள்ளியின் இயக்குநர், அவரது தந்தை, 3 ஆசிரியர்கள் உட்பட ஐவர் இணைந்து விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவனைக் கொலை செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளியின் பின்புறமுள்ள ஒரு கிணற்றின் அருகே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த கிணற்றுக்கு அருகில் மாந்திரீகம் தொடர்பான பொருட்களும் கண்டெக்கப்பட்டுள்ளன.
இதன்பின்னர், விசாரணை தொடர்ந்தபோது, ஐவரும் முன்னதாக ஒரு மாணவரை கொல்ல முயன்றும், அது நிகழாமல் போனதும் அம்பலமாகியுள்ளது.
அப்பள்ளியின் இயக்குனர் வாகனத்தில் மகனின் உயிரிழந்த உடலை கண்டு, மாணவனின் தந்தை விரைந்து போலிசாருக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து, அதிரடியாக அந்த ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.