
பெஷாவார், மார்ச்-8 – பாகிஸ்தான், பெஷாவார் நகரில், சமூக வாட்சப் குழுவிலிருந்து தம்மை நீக்கிய அட்மின் எனப்படும் குழு நிர்வாகியை ஆடவர் சுட்டுக் கொன்றார்.
Mushtaq Ahmed எனும் அந்த அட்மின் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, Ashfaq-கை வாட்சப் குழுவிலிருந்து Mushtaq நீக்கியுள்ளார்.
இதையடுத்து சமரசம் செய்துகொள்வதற்காக இரு தரப்பும் ஓரிடத்தில் சந்திக்க ஒப்புக் கொண்டன.
எனினும் Ashfaq வரும் போதே துப்பாக்கியைக் கொண்டு வந்து அட்மினை சுட்டுக்கொன்றார்.
Ashfaq மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடம், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இரத்தக்களரிக்கு பெயர் பெற்ற பகுதியாகும்.
துப்பாக்கிகள் எளிதில் கிடைப்பது, பழங்குடி பழக்கவழக்கங்களின் செல்வாக்கு மற்றும் சில நேரங்களில் பலவீனமான சட்ட அமுலாக்கம் ஆகியவை இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நிகழ்வதற்கு காரணமெனக் கூறப்படுகிறது.