கோலாலம்பூர், நவம்பர்-30, இரயில் நிலையங்களில் பயணிகளை நிர்வகிக்கும் SOP நடைமுறைகளை, தேசிய வசதிக் கட்டமைப்பு நிறுவனமான Prasarana Malaysia Sdn Bhd மேம்படுத்தியுள்ளது.
குறிப்பாக உச்ச நேரங்களின் போது கூட்டம் அலைமோதி, பயணிகள் திணறுவதத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சீரான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை உறுதிச் செய்ய, ரயில் வந்து நிற்குமிடங்கள், மின் படிகட்டுகள் போன்றவற்றில் உதவி போலீஸ்காரர்களைப் பணியமர்த்துவம் அவற்றில் அடங்கும்.
உச்ச நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும் நிலையங்களில் அடிக்கடி கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பாசார் செனி MRT நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து Prasarana அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 26-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்துக்கு, வர வேண்டிய இரயில் சரியான நேரத்திற்கு வராததே காரணமாகும்.
இரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் நகர முடியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து விட்டதாக Prasarana விளக்கியது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியதுக்கு மன்னிப்புக் கோரியதுடன் Rapid KL சேவைகள் பாதுகாப்பாகவும், ஆக்கப்பூர்வமாகவும், வசதிப்படவும் இருப்பது உறுதிச் செய்யப்படுமென உத்தரவாதமும் வழங்கியது.