
பாடாங் பெசார், மார்ச்-10 – பெர்லிஸ், பாடாங் பெசாரில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதி அவருக்கு மரணம் விளைவித்த Honda Civic காரோட்டுநர், மனநலம் குன்றியவர் ஆவார்.
அவர், மாற்றுத்திறனாளி அட்டை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
பாடாங் பெசார் போலீஸ் துணைத் தலைவர் சூப்ரிடன்டண்ட் சாரி சாலே அதனைத் தெரிவித்தார்.
எனினும், சம்பவத்தின் போது அந்த 33 வயது ஆடவரின் ஆரோக்கியம் எப்படி இருந்தது என்பது குறித்து மருத்துவமனையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாக அவர் சொன்னார்.
அவ்வாடவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்; குணமடைந்ததும், தேவைப்பட்டால் அவரைக் கைதுச் செய்வோம் என சாரி சாலே கூறினார்.
வெள்ளிக்கிழமை பெசெரியில் உள்ள ஜாலான் டத்தோ கயாமான் சாலையில் கார் மோதியதில், மோட்டார் சைக்கிளோட்டியான 49 வயது ஓய்வுப் பெற்ற இராணுவ கமாண்டோ மரணமுற்றார்.
பின்னால் அமர்ந்திருந்த அவரின் 16 வயது மகன் அதில் படுகாயமடைந்தான்.
இருவரும் நோன்புத் துறக்கவும் தொழுகைக்காகவும் சென்றுக் கொண்டிருந்த போது அவ்விபத்து நேர்ந்தது.